முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,   நான் அவரை

இவ்வருடத்தில் என்னை அழ வைத்தவர்களுக்கும் என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கும் நன்றி...

Cinar kavithaigal. 2023....வருடத்தின் நன்றிகள்.... இவ்வருடத்தில் என்னை  சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி... என்னை அழ வைத்தவர்களுக்கு  மிகவும் நன்றி... என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி... என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி... எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி... என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி... என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி... எனக்கு உதவியவர்களுக்கு நன்றி... எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்றோ ஒருநாள் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடக்கப்படுகிறது..சில வருத்தங்களும்சில வலிகளும்...💔 நிச்சயம் ஓர்நாள்நமக்கே திரும்பும்என்பதை நினைவில்கொண்டால்..காயப்படுத்தும் எண்ணம்யாருக்கும் தோன்றாது! அன்பான நண்பர்களுக்கும், நட்புகளுக்கும் உறவுகளுக்கும்  உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார நன்றிகள்....... வாழ்க வளமுடன்....!!!!