முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நல்ல சிந்தனைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,   நான் அவரை

எதிர்கால கனவை எண்ணி நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள்  அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...  குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.  இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது!  வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள்.

C inar kavithaigal. வள்ளலாரின்_அமுதமொழிகள். *பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்.* *கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது.* *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.* *பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும்.* *சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான்.* ஒருவரைப் பார்த்தாலே *யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.* *நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம்

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...

Cinar kavithaigal.                              நிதர்சனம்  நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில்  முடிவு செய்கிறது  வாழ்க்கை பயணம்                       வரப்பிரசாதம் இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம்                            அளவுகோல் அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!! நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு                           நம்பிக்கை பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வந்துவிட்டோம் இவ்வளவு தூரம்.. இனிவரும் இன்னல்களையும் கடப்போம் மனதிடத்துடனும் நம்பிக்கையுடன் ..                           குழந்தை மனசு இந்த தனிமையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால்...செய்த அட்டகாசங்கள் யாவும் பசுமையாக இருக்கிறது நினைவில்..யாரையோ நினைத்து அழுதவைகள் எல்லாம் இன்ற

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரும் அஞ்சாதே .. வெற்றிகள் உன்னுடன் சேரும்... தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை  விட்டு உழைத்து முன்னேறு என்றும் வெற்றிகள்  உன்னுடன் மறக்காதே.. வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது.. கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சு

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal. இருக்கும் உறவு இறக்கும் வரையில்  இருக்கும் பொருள் இழக்கும் வரையில்,  இரண்டின் அருமையும் இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை.  இழந்த பொருளின் இடத்தை நிறைக்க இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்..  இறந்த உறவின் இடத்தை நிறைக்க இயன்றவரை தேடினினும் இழந்த உறவு இழந்தது தான்.. இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை,  இருக்கும் உறவுகளுடன்,  இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது.. இனிமையானது...  புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள். "உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார்.  அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?

Cinar kavithaigal. இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் . அதை சிறப்பாக வாழ்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் . இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் . நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம். " மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔 "மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔 "அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔 "அவர்களிடம் இருப்பது நம்மிடம்  இல்லையே..."…🤔 இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள். உங்கள் சூழ்நிலைகள் உங்களை இயக்க அனுமதிக்காதீர்கள்.  சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களைச் சுற்

She is my wife"ன்னு சொல்றதுக்கு பதிலா "She is my Life"ன்னு சொல்லுங்கள்...!

 Cinar kavithaigal. நல்ல சிந்தனைகள் சூடமாே, பத்தியோ, பூஜையோ, மந்திரமாே, என எதுவுமே தேவையில்லை இந்த கோவிலுக்கு...!  "தாயின் கருவறை"...!! ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன் ..! கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்...!! உழவன் மழை வேண்டுவது உலகாள்வதற்கல்ல...! உலகம் வளமாவதற்கு...!! இலட்சங்கள் நடமாடும் நகைக்கடை நடைபாதையில் ஒரு ரூபாய்க்கு ஊக்கு விற்று பிழைப்பவனை  கை விடுவதில்லை நம்பிக்கை...!! அம்மாவை   " மம்மியாக" மாற்றிக்கொண்டது நகரம் ...! அம்மாவை "அம்மனாக" பார்த்துக்கொண்டது கிராமம்....!! சுகர் பேசன்ட் ... லாலா கடை இனிப்பை பார்ப்பது  போலத்தான் ...! பட்டு சேலை பிரிவில் ஆண்களின் நிலையும்....!! உங்கள் மனைவியை அடுத்தவரிடம் அறிமுகப்படுத்தும்போது  "She is my wife"ன்னு சொல்றதுக்கு பதிலா  "She is my Life"ன்னு சொல்லுங்கள்...! வாழ்க்கை சந்தோசமாய் நகரும்...!! வீட்டு மருத்துவம். தலை பாரம் , சீதளம் நீங்க தும்பைப்பூவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். பொது தகவல். கின்னஸ் புத்தகத்தை வெள