Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே...
என் வாழ்வில் எனக்கு
மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது
என் உதடுகளுக்கு தெரியாது.
அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊
எதிர்நீச்சல்
நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன்மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன்பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன்தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்
தொடர்ச்சி
வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை
போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு
தோல்விகள் வரும் அஞ்சாதே ..
வெற்றிகள் உன்னுடன் சேரும்...
தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை
விட்டு உழைத்து முன்னேறு
என்றும் வெற்றிகள் உன்னுடன் மறக்காதே..
வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது..
கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சுமக்க தெரியாது..
நிரந்தரம்
வெகு இலகுவாக கிடைக்கும்
எதுவும் நிரந்தரமில்லை
விரைவில் வேறொருவருடையதாக
மாறிப்போகும்...
கடின உழைப்போடு
கிடைத்த வெற்றிக்கு
மகிழ்ச்சியும் ஆயுளும் அதிகமே...
துணை
தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே அழைத்திட்டேன்
தனிமையை துணையென....
பாசம்
சிலருக்கு காட்ட தெரிவதில்லை...
சிலருக்கு காட்டுவது தெரிவதில்லை...
சிலருக்கு காட்டுவது புரிவதே இல்லை ....
சரிசமம்
இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உண்மையை அறிந்தவர்கள்
துன்பத்திலும் இதழ்களில் புன்னகைப்பதை மறக்கமாட்டார்கள்
ஆதாரம்
பொய்களை எளிதாக
நம்புகிற இந்த உலகம்...!
உண்மையை நிரூபிக்க
ஆதாரம் கேட்கிறது,
முக்கியமானது
மனதில் தோன்றும் ஆசைகளை *அடக்க*
வேண்டியதில்லை...!அதைச்
*சீரமைப்பதுதான்* முக்கியம்...!
பேராசை
வாழ்க்கையில் உங்களிடமிருந்து விழுந்ததை எடுக்க குனிந்து கொள்ளாதீர்கள்..நீங்கள் வளைந்தால் உங்களிடமிருந்து நிறைய விழும்!
வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை..
நாமாக விடை தேடி
அலையாதவரையில்.!
கருத்துகள்