முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய்  யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால்  போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ,  மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது.  அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து  முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு  வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் 

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal.
என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம்
கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !
என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் !
உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் !
திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால்
திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும் 
கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் !
நேரத்தை நீ மதித்து நடந்தால்
நேரம் உன்னை மதித்து நடக்கும் !
சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் !

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

முந்தைய சாதனை வரலாறு படித்திடு
முயன்று முந்தையதை முறியிடித்திடு !
அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே
அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது !
உன்னை நீ முதலில் முழுதாக நம்பு
உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு !
நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை
நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு !
முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும்
முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது !
*பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.!

மரியாதை மரியாதை 

மரியாதை மரியாதை
ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள், சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத்தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்ததும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக்கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உட்கார்ந்திருக்கிறாயே?" என்றார்.
பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்கே. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையை உடன் வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும், ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார்..
காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக்கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"
மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. 
சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார்.
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜா வாயடைத்துப் போனார்..!
*எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை.*
 *நிரந்தரமான மரியாதை என்பது "உன் பணத்தைக்கொண்டு" வாங்கும் பொருளில்லை. உண்மையான அன்பை முதலில் நீ பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹா...

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...