Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar🍁kavithaigal.ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை..
ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை..
ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை..
இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!
நாணலில்
தொங்கி நிற்கும்
பனித்துளி..
நீராடிவிட்டு வந்தவளின்
கோதுமை கன்னத்தில்
நீர்துளி!
ஏக்கம்
கற்பனை எனும்
போர்வைக்குள்
ஒளிந்திருக்கின்றன..
நம் நிறைவேறா ஆசைகள்!
பிம்பம்
நானும் அழகாகத்
தெரிந்தேன்..
அந்தக் கண்ணாடியில்
நீ முகம் பார்த்த பிறகு!
காந்தம்
அவள் கண்களும்
ஒரு வகையில் காந்தம்தான்..
என் இதய இரும்பை
ஈர்ப்பதாலே!
மரணமே இல்லை
நிறம் பார்த்து
வரும் காதல்
நிரந்தரமானது
இல்லை..
மனம் பார்த்து
வரும் காதலுக்கு
மரணமே இல்லை!
போதை தான்
அன்பும்
ஒரு வகை போதை தான்..
அடிமையானால்
ஆயுள் வரை கொல்லும்!
காதல் செடி
காதல் செடியில்
ஒருமுறை தான்
காதல் வரும்
என்பதெல்லாம் பொய்..
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறதடி
உன் ஒவ்வோர்
புன்னகையிலும்..
என் காதல் ராட்சசி!
இதுவும் பாவம் தான்
நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட..
ஒரு வகையில்
பாவம் தான்!
பிடிக்காத வாழ்க்கை
பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்..
பிடித்தவருக்காக வாழ்ந்திடுங்கள்..
பிடிக்காத வாழ்க்கையும் பிடித்துவிடும்!
கருத்துகள்