முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Lifestyle லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோட...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.*  *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*  *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.  *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,  *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*  *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*  *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*  *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.  *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*  *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....  *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.  *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*  *ஆனால் நான் அதை உணர முடியாது.*  *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*  *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,  *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் ந...

நான் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.

Cinar kavithaigal. Kuttystory   ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “ எஜமான் ! இரண்டுஆண்டுகளாக நான் உங்களிடம்வேலைசெய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவுசெய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய்.  நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிட...

எதிர்கால கனவை எண்ணி நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள்  அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...  குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.  இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது!  வெளிச்சம் ப...

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'

Cinar kavithaigal.           மௌனத்தின் வலி மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்' இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"                   அடையாளம் தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!                 நிரந்தரம் உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் , நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல ! வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ  வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !                       இலக்கு ௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!  ௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு! சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்! மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!! எதிர்த்தமாய் சொல்வது வேறு...!             ...

Personal Lifestyle

 Cinar kavithaigal. Personal Lifestyle அவள் எனக்குள்ளும்; நான் அவளுக்குள்ளும் அடங்குவதே வாழ்வே தவிர.. யார் யாருக்கு அடங்கவேண்டும் என்பதில் இல்லை வாழ்வு! ❤️💛 இப்படியாக ஒரு உலகத்தில் தொலைந்து விடவேண்டும்..            நீயும் நானும் மட்டும்!