Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
'இலக்கு'
முடியாத பயணங்கள்வேண்டும்..
'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது..
அடைந்தே தீர வேண்டும் என்ற
'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!
இதயம்
தொலைந்ததைதேடலாம்..தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...
நாள்தோறும்
முடியாத பயணங்கள்வேண்டும்..
உன் கைவிரல் பிடித்தபடி!
கற்பனைகள்
காதலி வேண்டுமென்பதில்லை..
கற்பனைகளே
போதுமானதாகிறது..
கவிதைக்கு..!!
வடுக்கள்
வலிகள் ஆயிரம் இருப்பினும்
ஒரு போதும் அதன் சாயங்களை இங்கு பூசிவிடாதே..
பின்னொரு
நாளில் அதுவே
மறையாத வடுவாகிவிடும்!
மறதி
நீரை நிறைத்திடும் பூக்கள்
குளத்தை மறைத்திடுவது பாேல..
உன்னை நினைத்திடும் மனம்
என்னை மறந்தே தொலைக்கின்றது!
இல்லாத ஒன்று
நல்ல நண்பன்
என் வாழ்வின் மிகச் சிறந்த நண்பனை..
நான் எப்போதும் கண்ணாடியில் மட்டுமே காண்பேன்!
காதல் தோல்வி
மரண வலியை கூட தாங்கி கொள்ளலாம்..
மன வலியை தான் தாங்க முடியவில்லை!
காதலை இழந்தவன்
காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளை
வடித்திருக்கலாம்..
ஆனால்..
காதலை இழந்தவன் தான் அற்புத
காதல் கவிதைகளை
படைத்திருக்கிறான்!
என் ராட்சஷி
கவிதையின் ராட்சஷிக்கு
காதல் வந்து விட்டதாம்
என் மீது அல்ல என் கவிதை மீது
அவள் வெட்கத்திற்கே
என் முதல் கவிதை
முத்தமாய்..
நாணம்
என்றோ விழுந்துவிட்டேன் உனதன்பில்..
இப்படி பார்வையால் மேலும்
கொள்கிறாய். என்னை..
எவ்வளவு நேரம் தான்
படிப்பது போல நடிப்பது நானும்..! 🙃
கருத்துகள்