முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal.

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்
நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.
அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 
அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. 
நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். 
சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. 

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
 எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.
இறுதியாக, சாதித்து விட்டேன்!
 அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். 
எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.
அவரைக் கடந்த பிறகு,
 நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....
1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை. 
2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.
3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.
4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?
 நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.
எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள். 
உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்

 நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,? 
எங்கே செல்கின்றார்கள்,? 
என்ன அணிகிறார்கள்,?
 என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,? 
என்ன பேசுகிறார்கள்?..
என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.
உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
 நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.
 கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.
நாம் யாருக்கும் போட்டி இல்லை.
யாரும் நமக்கு போட்டி இல்லை.
 அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும்  நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*
மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம். 
உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

முடிவுரை;

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.
வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

இந்த அன்பு துளிர்க்கும் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்து சிரித்துக்கொள்கிறோம்.நானும் என் காதலும்

Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும்  எதிர்பார்க்காத  என் மனம்.. உன்னிடம்  மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின்  ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது