முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய்  யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால்  போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ,  மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது.  அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து  முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு  வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் 

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal.

*நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,

நான் இறந்தவுடன்.*
நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .
 *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*
 *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.
 *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,
 *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*
 *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*
 *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*
 *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.
 *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*
 *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....
 *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.
 *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*
 *ஆனால் நான் அதை உணர முடியாது.*
 *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*
 *நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,
 *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்*
 *நான் இறந்து விட்டேன் என்று நீங்கள் காதால் கேட்கும்போது, ​​​​இரங்கல் தெரிவிக்க என் வீட்டிற்கு உங்கள் வழியைக் கண்டுபிடிப்பீர்கள், ஆனால் நாம் பல ஆண்டுகளாக பேசவில்லையே.
 *ஆதலால் இப்போதே என்னை சந்தித்து ஆதரவாய்,  இப்போதே எனக்குப் பதிலளிக்கவும்.*
 *உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருடனும் நேரத்தைச் செலவிடுங்கள், மேலும் அவர்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்  அறிமுகமானவர்களை மகிழ்விக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யுங்கள்.*
 *அவர்களை ஸ்பெஷலாக உணருங்கள், ஏனென்றால் காலம் எப்போது அவர்களை உங்களிடமிருந்து என்றென்றும் பறிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.*
 *நான் தனியாகத் தான் செல்ல' வேண்டும் ஆனால்* *நாம் இப்பொழுது ஒன்றாக  வாழ்ந்துவிடலாமே*.
 *நான் தனியாக 'மகிழ்ச்சி' அனுபவிக்க முடியும் ஆனால் நாம் ஒன்றாக 'கொண்டாடலாமே*'
 *என்னால் தனியாக 'சிரிக்க முடியும்' ஆனால் நாம் ஒன்றாக 'சிரிக்கலாமே'*
 *இதுதான் மனித உறவுகளின்அழகு*.
 *ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் ஒன்றுமேயில்லை*
 *எனவே இணைந்திருங்கள்!!*
 *கடவுளை நேசியுங்கள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்  கடவுளையும் அவருடைய உருவத்தையும் நீங்களும் & நானும் சேர்ந்து தரிசிக்கலாம்!!!*
வாழ்ந்திடுவோம் நாம் நூறாண்டு,!

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் மேலும் வளர்க்க கவிஞரே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹா...

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...