SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் .
அதை சிறப்பாக வாழ்வது
உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் .
இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் .
நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம்.
" மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔
"மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔
"அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔
"அவர்களிடம் இருப்பது நம்மிடம் இல்லையே..."…🤔
இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல்
ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள்.
உங்கள் சூழ்நிலைகள் உங்களை
இயக்க அனுமதிக்காதீர்கள்.
சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
உங்களை நீங்களே விரும்புங்கள்.
இந்த உலகமே உங்களை விரும்பினாலும் உங்களை
நீங்கள் முழுமையாக விரும்பினால் மட்டுமே உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உங்கள் மனதில் "எதை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீருவேன் " என்ற வைராக்கியத்துடன் இருந்தால் உங்களால் எல்லாவற்றையும் அடைய முடியும்.
நிச்சயம் அடைந்து காட்டுவீர்கள்👍
உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்து சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்.
கருத்துகள்