முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

Today is November 25 in history

 Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று
25/11-வியாழன்

வரலாற்றில் இன்று 25/11/வியாழன்
885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர்.

1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான்.

1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன.

1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 

30,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது.

1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார்.

1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹாகன் என்ற பெயரில் நார்வே மன்னராக முடிசூடினார்.

1917 : முதலாம் உலகப் போர்:- ஜெர்மனி படை மொசாம்பிக், தான்சானியா எல்லையில் போர்ச்சுகீஸ் ராணுவத்தை தோற்கடித்தது.

1926 : அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்தனர்.

400 பேர் காயமடைந்தனர்.

1936 : ஜப்பானும் ஜெர்மனியும்  சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.

1941 : இரண்டாம் உலகப்போர்:- பிரிட்டனின் பர்ஹாம் என்ற கப்பல் ஜெர்மனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர்:- பிரிட்டன், டெப்ட்ஃபோர்ட் நகரில் கடைத் தொகுதியில் ஜெர்மனி விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

1950 : அமெரிக்காவின் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.

1960 : டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்

1973 : கிரேக்கத் தலைவர் ஜார்ஜ் பாப்படபவுலஸ் ராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.

1975 : சுரிநாம் நெதர்லாந்திடமிருந்து விடுதலை பெற்றது.

1981 : ரொடீஷியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாப்ரிக்காவின் டர்பன் நகருக்கு செலுத்தப்பட்டது.

1987 : பிலிப்பைன்ஸை சூறாவளித் தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.

1992 : செக்கோஸ்லோவாக்கியாவின் நாடாளுமன்றம் செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரண்டாக 1993 ஜனவரி 1 லிருந்து பிரிக்க முடிவு எடுத்தது.

1996 : அமெரிக்காவின் நடுப்பகுதியை சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2000 : அஜர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2006 : சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.

2008 : இலங்கையின் வடக்குப் பகுதியில் நிஷா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...