Cinar kavithaigal.
நல்ல சிந்தனைகள்
சூடமாே, பத்தியோ, பூஜையோ, மந்திரமாே, என எதுவுமே தேவையில்லை இந்த கோவிலுக்கு...!
"தாயின் கருவறை"...!!
ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன்..!
கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்...!!
உழவன்
மழை வேண்டுவது
உலகாள்வதற்கல்ல...!
உலகம் வளமாவதற்கு...!!
இலட்சங்கள் நடமாடும் நகைக்கடை நடைபாதையில் ஒரு ரூபாய்க்கு ஊக்கு விற்று பிழைப்பவனை கை விடுவதில்லை நம்பிக்கை...!!
அம்மாவை "மம்மியாக" மாற்றிக்கொண்டது நகரம் ...!
அம்மாவை "அம்மனாக" பார்த்துக்கொண்டது கிராமம்....!!
சுகர் பேசன்ட் ...
லாலா கடை இனிப்பை பார்ப்பது போலத்தான் ...!
பட்டு சேலை பிரிவில் ஆண்களின் நிலையும்....!!
உங்கள் மனைவியை அடுத்தவரிடம் அறிமுகப்படுத்தும்போது
"She is my wife"ன்னு
சொல்றதுக்கு பதிலா
"She is my Life"ன்னு
சொல்லுங்கள்...!
வாழ்க்கை சந்தோசமாய் நகரும்...!!
வீட்டு மருத்துவம்.
தலை பாரம் , சீதளம் நீங்க தும்பைப்பூவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
பொது தகவல்.
கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் லண்டன் நகரில் உள்ளது.
கருத்துகள்