Cinar kavithaigal.
நிதர்சனம்நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில் முடிவு செய்கிறது
வாழ்க்கை பயணம்
வரப்பிரசாதம்
இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம்
அளவுகோல்
அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!!
நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு
நம்பிக்கை
பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வந்துவிட்டோம் இவ்வளவு தூரம்.. இனிவரும் இன்னல்களையும் கடப்போம் மனதிடத்துடனும் நம்பிக்கையுடன் ..
குழந்தை மனசு
இந்த தனிமையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால்...செய்த அட்டகாசங்கள் யாவும் பசுமையாக இருக்கிறது நினைவில்..யாரையோ நினைத்து அழுதவைகள் எல்லாம் இன்று கோமாளி தனமாக..திருத்திக் கொண்ட தவறுகள் தான் வாழ்க்கையை உயர்த்தி இருக்கிறது...
வித்தியாசமானது தான் இந்த வாழ்க்கை...
சிங்கமாக இரு
உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...
லீடர்ஷிப்
தலைமைத்துவம் என்பது பிறரால் உருவாக்கப்பட முன்னர் நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியதொன்று.
பெருமைக் கொள்
நம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை..
நாம் அவர்களை விட இரண்டடி முன்னால் இருக்கிறோம் என்று பெருமை கொள்வோம்.!
புரியும் புதிர்
வாழ்க்கை அப்படியொன்றும் புதிரானது இல்லை..நாமாக விடை தேடி அலையாதவரையில்.!
அமைதி தேடி
ஏமாளிகள்
முதல் சந்திப்பு
ஒவ்வொரு முகம் தெரியாத புதிய அறிமுகங்களும் அலாதியானவை..
நீயார் நான் யார் நீ என்ன செய்கிறாய் நான் என்ன செய்கிறேன்..உன் வயதென்ன என் வயதென்ன..நீ நலமா நான் நலம்..ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுச்செய்திகளுடனும் தொடரும் ஒரு நட்பில் ஒரு காதலில் ஒரு நேசத்தில்..ஒரு கட்டத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ஒன்றுமேயில்லை..இதற்கப்பாலும் ஒரு பிரியத்தை வளர்ப்பதாயின்..
பரிணாமம்
இன்னுமொரு பரிணாமம் தேவை..குரல்களாகவும் முகம்களாகவும்..அதன்பின் ஒரு அன்பின் நீட்சிக்கு முடிவேயில்லையா? பிடித்த திரைப்படமென்றாலும் ஒரே நாளில் எத்தனை முறை பார்ப்பாய்..பிடித்தமானதொரு பாடலை ஒரே நாளில் எத்தனை முறை கேட்ப்பாய்... முடிவேயில்லையா?எனக்கும்தான் புரிபடவேயில்லை..மயிலிறகு மனசு!
கருத்துகள்