முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.    

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே...
உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே  மதிக்காதே..!!

என் வாழ்வில் எனக்கு 
மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது 
என் உதடுகளுக்கு தெரியாது.
அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊

                              எதிர்நீச்சல் 

நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன்
மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன்
பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன்
தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம்
இவைகளும் என்னைப் போன்று பிறர்
நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்

                                            தொடர்ச்சி 
வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை
போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு
தோல்விகள் வரும் அஞ்சாதே ..
வெற்றிகள் உன்னுடன் சேரும்...
தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை 
விட்டு உழைத்து முன்னேறு
என்றும் வெற்றிகள்  உன்னுடன் மறக்காதே..

வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது..
கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சுமக்க தெரியாது..

                                 நிரந்தரம் 

வெகு இலகுவாக கிடைக்கும் 
எதுவும் நிரந்தரமில்லை
விரைவில் வேறொருவருடையதாக
மாறிப்போகும்...
கடின உழைப்போடு 
கிடைத்த வெற்றிக்கு
மகிழ்ச்சியும் ஆயுளும் அதிகமே...

                                  துணை 

தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே அழைத்திட்டேன்
தனிமையை துணையென....
                                         பாசம் 
சிலருக்கு காட்ட  தெரிவதில்லை...
 சிலருக்கு காட்டுவது தெரிவதில்லை...
 சிலருக்கு காட்டுவது புரிவதே இல்லை ....
                                           சரிசமம் 
இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை  என்ற உண்மையை அறிந்தவர்கள் 
துன்பத்திலும் இதழ்களில் புன்னகைப்பதை மறக்கமாட்டார்கள்

                                             ஆதாரம் 

  பொய்களை எளிதாக
   நம்புகிற இந்த உலகம்...!
 உண்மையை நிரூபிக்க
  ஆதாரம் கேட்கிறது,
                                          
                                      முக்கியமானது    
 மனதில் தோன்றும் ஆசைகளை *அடக்க* 
வேண்டியதில்லை...!அதைச் 
 *சீரமைப்பதுதான்* முக்கியம்...!

                                    பேராசை 

வாழ்க்கையில் உங்களிடமிருந்து விழுந்ததை எடுக்க குனிந்து கொள்ளாதீர்கள்..நீங்கள் வளைந்தால்  உங்களிடமிருந்து நிறைய விழும்!

வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை..
நாமாக விடை தேடி
அலையாதவரையில்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.*  *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*  *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.  *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,  *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*  *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*  *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*  *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.  *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*  *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....  *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.  *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*  *ஆனால் நான் அதை உணர முடியாது.*  *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*  *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,  *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் ந...