முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய்  யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால்  போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ,  மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது.  அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து  முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு  வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் 

வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை

Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று 30/11


1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார்.

1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.

1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை 
இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது. 
20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது.

1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.

1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது.


1914 : சார்லி சாப்ளினின் முதல் படம் மேகிங் ஏ லிவிங் வெளியானது. 
இப்படத்தில் அவர் கைப்பிரம்பும் மீசையும் இல்லாமல் நடித்திருந்தார்.


1920 : போலந்து- லிதுவேனியா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

1928 : சைமன் கமிஷனை எதிர்த்து லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜவஹர்லால் நேரு தாக்கப்பட்டார்.

1936 : லண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.

1939 : ரஷ்யப் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசின.

1947 : பாலஸ்தீன உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இது இஸ்ரேல் அரசை உருவாக்க வழிவகுத்தது.

1952 : நாகப்பட்டினம் அருகே வீசிய கடும் சூறாவளியில் 400 பேர் உயிரிழந்தனர்.

1954 : அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்கல் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

1966 : பிரிட்டனிடமிருந்து பார்படாஸ் விடுதலை பெற்றது.

1967 : பிரிட்டனிடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை அடைந்தது.

சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

1971 : ஈரான், அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.

1982 : மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டது.


1988 : பங்களாதேஷில் இடம்பெற்ற சூறாவளியில் 317 பேர் உயிரிழந்தனர்.

1991 : சான்பிரான்சிஸ்கோ அருகே புயலின்போது 93 கார்கள் மற்றும் 11 லாரி விபத்து ஏற்பட்டதில் 17 பேர் இறந்தனர்.

1995 : வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

2000 : நாசா தனது 101 வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.

2012 : காங்கோ, பிராசவில்லி நகரில் சரக்கு விமானம் 
நகரக் குடியிருப்புகளின் மீது விழுந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹா...