Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
தேவதாஸ்
உனக்கும் எனக்குமான
தேவதாஸ்
காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளைவடித்திருக்கலாம்..ஆனால் காதலை இழந்தவன் தான் அற்புத காதல் கவிதைகளை படைத்திருக்கிறான்! கரிசனம்
நின் முன்னழகால்நானுடைந்தது போதாதா..
இனி கண்ணாடியுமா!?
மனைவி
சண்டையோ..அன்போ..
உன்னிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கிறது இந்த மனசு!
நினைவுகள்
மறந்து போன நினைவுகளை
மீண்டும் தூசி தட்டி
எழுப்பி விடுகிறது..
எங்கிருந்தோ கேட்கும்
நமக்குப் பிடித்த பாடல்!
பரிதவிப்பு
அலைபேசி சிணுங்கிஅழைக்கும் போதெல்லாம்படபடத்துப் பறக்குதுபாதங்கள் இரண்டும்..அழைப்பது நீயாக இருக்கவேண்டுமென்ற ஆவலோடு!
கண்டனம்
உன்னை முழுக்க நனைத்த மழைக்கு கண்டனம் தெரிவிக்கும்..கருப்புக் குடைகள்!
சாகாவரம்
தோள் சாயும் நேரம் உயிர்மீற..
உன் ஒற்றைவிரல் போதும்..
கன்ன கதுப்பில் கோலமிட்டுஉயிர்
மீட்க..!
நினைவுகள்
வெளியேஎவ்வளவு சந்தோஷமான
சூழ்நிலைகள்கொட்டி இருந்தாலும்..
மனதுக்குள் ஒரு சோகமான
கேட்பாரற்ற தனிமை
ஓடிக்கொண்டுதான் இருக்கும்!
உன் நினைவுகளோடு ..!
உணர்ச்சிகள்
நீ தொட்டால் போதும்
அழகியாக மலர்வேன்
நான்!
விரல் பத்தும்
கட்டிக்தழுவும் பொழுதில்..
விரதம் யாவும்
முறிந்து போகும்!
உன் புன்னகையால்
என் இதயத்தில்
தோரணம் கட்டினாய்..
என் வானில்
பொன்விழா கோலம் !
நேச வலி..!
பட்டும் படாமலும்,
தொட்டும் தொடாமலும்
தொடரும் நேசங்களினாலே
படர்ந்து விடுகிறது..
இதயமெங்கும் தீரா
ஓர் நேச வலி..!
உன்னியல்பில் நீ
என்னியல்பில் நான்..
வண்டோடல்ல
தேனொடே பூ முரண்..
நேசம்
உனக்கும் எனக்குமான
புரிதலில் மட்டுமே
அழகாகிறது உலகம்!
மௌன வலி
வெறுமையாய் ஒரு வாழ்க்கை..கனக்கிறது
இதயம்..
காரணமாய் நீ !
கத்தி சொல்லவும்
கதறி அழவும்
விருப்பமில்லை..
என் தகப்பனுக்கு பிடிக்காது நான் அழுதால்..!
களவையும் கற்று
இப்படி பேதை பெண்களை பார்த்தால்..புத்தனாய் திரியும்சில ஆண்களும்;சித்தம் கெட்டுகளவையும் கற்று மறக்கின்றேன்..உன்னை திருடிவிட்டு!
இப்போதெல்லாம்.. பிரிவுகள் ஏதும் பெரிதாக வலிப்பதேயில்லை..
பழகி விட்டதால் அல்ல..
உணர்(ற)வுகள் அனைத்தும்
என்னை விட்டு விலகி விட்டதால்!
நித்தம் கனவில் மட்டும் வந்துசெல்லவா
உன் மீது காதல்
கொண்டேன்?
பிரிவு நிகழுமென அறிந்தே..
பிரியபட்டு
பிரிவின் வலியை
தாங்கிகொள்கிறேன்.
கண்டும்காணாமல்
காணாமல் போனவர்களை தேடலாம்..
அதில் சிறிதும் தவறு இல்லை! ஆனால் கண்டும்காணாமல் போனவர்களை மட்டும் வாழ்க்கையில் நீ தேடி விடாதீர்கள்.!!
குடைக்குள் மழை
எப்படி புரிய வைப்பேன் உனக்கு நான்..
உனது கரம் தான் எனது 'கலங்கரை விளக்(கு)கம்' என்று!
வாயேன்
குடையோடு
நடை பழகலாம்
மழையோடு!
நஞ்சு
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு..
அவளது முத்தம் தவிர!
வாழ்க்கை துணை
துணை என்பது என்னோடு நிற்பவன் அல்ல..
எனக்காக வாழ்க்கை முழுவதும் நிற்பவன்!
என் மீது தவறே இருந்தாலும்..
என்னை பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவன்..
காதலுடன்!
கடைசி ஆசை
உனக்காக நான் இருக்க வேண்டும் என்பதை விட..
உன்னுள் முழுக்க நான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே..
என் ஆசை!
விதி என்று நினைத்து
விலகி விடாதே..
என் உடல் வீதி வரை
செல்லும் வரையிலும்
நீ வேண்டும்..
என் துணையாக!
கருத்துகள்