SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
ஒரு சிறிய உதாரணக் கதைகள்
அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.
மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.
தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...
குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.
இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
பொழுது விடிய ஆரம்பித்தது!
வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான்.
பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.
யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.
முடிவுரை:
ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் எனும் வாழ்க்கை என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

கருத்துகள்