Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
இருக்கும் உறவு இறக்கும் வரையில்
இருக்கும் பொருள் இழக்கும் வரையில்,
இரண்டின் அருமையும்
இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை.
இழந்த பொருளின் இடத்தை நிறைக்க
இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்..
இறந்த உறவின் இடத்தை நிறைக்க
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு இழந்தது தான்..
இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை,
இருக்கும் உறவுகளுடன்,
இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது..
இனிமையானது...
புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள்.
"உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார்.
அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "
தன்னைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தன்னைப் பற்றி தெளிவாக அறிந்து , சூழ்நிலைகளை மிகக் கூர்மையாக புரிந்துகொண்டவர்கள் , சாதாரணமாக, ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள்.
இதற்கு அன்பும், தூய மனமும் கொண்டவராக இருக்க வேண்டும்.
ஏனெனில் , தன்னைப் பற்றி சிந்திக்காமல்,
அடுத்தவரை குறை கூறுகிறவர் , மனக்குழப்பத்திலேயே இருந்துகொண்டு, தனது வாழ்க்கையை வாழத் தெரியாமலிருக்கின்றனர்..
நீங்கள் விரும்பினால் ,
துயரத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன ;
அதே சமயத்தில் , நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் மிகக் குறைந்த வாய்ப்புகள்தான் இந்த உலகத்தில் இருக்கின்றன .
எந்த வாய்ப்பினை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .
தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் .
ஏனென்றால் , மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிய தைரியம், இங்கு மிகச்சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது.
பலபேர், எது கிடைத்தாலும் அதில் சலிப்படைவார்கள் .
எது கிடைக்கவில்லையோ, அதற்காக ஏங்குவார்கள்..
வருவதை ஏற்று, இருப்பதை உணர்ந்து அனுபவித்து, ஆனந்தமாக இருப்பதில்லை..
உங்களுக்காக நீங்கள் குறிப்பிட்ட நேரமேனும் ஒதுக்கிக் கொள்வதே மிகச் சிறந்த வாழ்வுமுறை...
அடுத்தவர்களின் மனநிறைவுக்காக, அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக,
நீங்கள் ஒருபோதும் செயல்பட
வேண்டியதில்லை...
உங்கள் மனநிறைவை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுங்கள் .
கருத்துகள்