Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
வரலாற்றில் இன்று 2/ DEC
1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது.
1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.
1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது.
1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார்.
1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின்
பேரரசராக முடிசூடினார்.
1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.
1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில்
முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார்.
1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது.
1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின.
1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது.
1950 : கொரியப் போர் :- வட கொரியாவில் இருந்து ஐநா படையினர் முற்றிலும் விலக்கப்பட்டனர்.
1954 : சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்பு
ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்திடப் பட்டது.
1956 : பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற
படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
1971 : அபுதாபி, அஜ்மான், புஜைரா, ஷார்ஜா, துபாய்,
உம்அல்-குவைன் ஆகிய நாடுகள் அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.
1976 : பிடல்காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப்
பதவியேற்றார்.
1980 : எல் சல்வடோரில் 4 அமெரிக்க மிஷனரிகள்
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
1984 : முல்லைத் தீவு, ஒதியமலை கிராமத்தில் இலங்கை ராணுவத்தினரால் 32 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1982 : முதலாவது செயற்கை இதயம் உட்டா பல்கலைக்கழக மையத்தில் பார்னி கிளார்க் என்பவருக்கு பொருத்தப்பட்டது.
1991 : இந்தியாவில் முதன் முதலாக நாடாளுமன்ற கேள்வி நேர நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
1993 : கொலம்பியாவின் போதை பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எஸ்கோபர் மெடலின் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1995 : யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை ராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
2002 : இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையே பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2006 : பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால்
நாட்டுடமை ஆக்கப்பட்டன.
2016 : கலிபோர்னியா, ஓக்லாண்ட் கிடங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள்