Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
வள்ளலாரின்_அமுதமொழிகள்.
*பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்.*
*கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது.*
*வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.*
*பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும்.*
*சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான்.*
ஒருவரைப் பார்த்தாலே
*யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.*
*நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம் கொடுப்போரையும், அஞ்சி வந்து அடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், பசியினால் தவிப்போர்க்கு அன்னம் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரம் கட்டித்தருமம் செய்வோரையும், குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவதரிசனம் செய்வோரையும் ஒரு நாளும் தடுக்கக்கூடாது.*
அறம் என்பது
*பசியில் துன்புற்று, கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களில் நீர் கலங்க, வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
இலக்கினை அடையும் வரை
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்.
கருத்துகள்