Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள் அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் ப...