முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

இந்த அன்பு துளிர்க்கும் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்து சிரித்துக்கொள்கிறோம்.நானும் என் காதலும்

Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும்  எதிர்பார்க்காத  என் மனம்.. உன்னிடம்  மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின்  ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...

ஒன்ஸ் மோர் காதல் கவிதைகள் Tamil WhatsApp status quotes

Cinar kavithaigal. ஒன்ஸ் மோர்   என் காதலுக்கு சாமர்த்தியம் போதவில்லை.. என் கைக்குட்டைக்கு கண்ணீரை அடக்கும் திறமையில்லை.. அழத்துணிந்த உதட்டுகளுக்கு பரிதவிப்புகளை பகட்டுமொழியில் கூறும் அறிவில்லை.. இத்தனைக்கும் என் காதல் ஒன்றும் காகித காதலில்லை.. வா.. மீண்டும் ஒரு காதல் செய்வோம்!,,💖👩‍❤️‍👨 சூழ்நிலை கைதி   சூழ்நிலை ஒரு  நொறுங்கிய கண்ணாடி.. நாம் ஒழுங்காக இருந்தாலும் அலங்கோலமாகவே காட்டும்  தேடல் முடிவுகள்  நீயில்லாத தருணங்களில்.. நட்சத்திரங்களும்  மின்மினிகளும் பட்டுப்பூச்சிகளும் தேடித்தவிக்கும்.. என்னைப் போலவே! எவரும் காணாத அழகிய பொக்கிஷமாய் ஓர் உண்மை காதல்.. எனக்குள் மட்டும் நினைவுகளாய்! சத்தியமான அன்பு மனதில் அன்பு  இருந்தாலே போதும்  எதுவும் சாத்தியமே.. கடினமான இதயம்  கூட கரையும்.. அன்பை மழையாய்  பொழியும் போது!

Best couples what's app status videos

Cinar kavithaigal. Best couples what's app status videos  Tere hasi song videos 

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

நான் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.

Cinar kavithaigal. Kuttystory   ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “ எஜமான் ! இரண்டுஆண்டுகளாக நான் உங்களிடம்வேலைசெய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவுசெய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய்.  நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிட...

எதிர்கால கனவை எண்ணி நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள்  அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...  குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.  இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது!  வெளிச்சம் ப...